வங்கினா 'பணம்' வைப்போம் 'நகை' வைப்போம். ஆனால், இந்த வங்கியில் சற்று வித்தியாசமாக, உயிரிழந்தோரின் 'சாம்பலை' பத்திரமாக சேமித்து வைத்துள்ளனர். குஜராத் மாநிலத்தில், அகமதாபாத்தில் விமான நிலையம் அருகில் தான் 'சாம்பல் வங்கி' பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த வங்கியானது சாரா அமைப்பினரால் (Chhara community) பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு இறந்தவர்களின் பெயர்கள் எழுதிய பெட்டியில் அவர்களின் சாம்பல், எலும்பு, உபயோகித்த பூ ஆகியவற்றை தனித்தனியாக அடைத்து வைப்பார்கள். இந்தப் பெட்டியானது இறந்தவரின் உறவினர்கள் கேட்கும் போது அவர்களுக்கு வழங்குவர். பொதுவாகன் இந்த வங்கியிலிருந்த பெட்டிகள் அனைத்துமே 15 முதல் 20 வயதுக்குள்ளான இளைஞர்களின் சாம்பல்கள் தான். மிகவும் துருப்பிடித்த நிலையில் பெட்டிகள் வங்கியில் இருந்தது.
இதுகுறித்து வங்கி பாதுகாவலர் அனில் சாரா கூறுகையில், 'இந்தப் பாரம்பரியமானது பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள், அவர்களது உறவினர்களின் சாம்பலை எப்போது நதியில் கரைக்க நேரம் கிடைக்கிறதோ, அப்போது எடுத்துக்கொண்டு செல்வார்கள்’ என்றார்.
இதையும் படிங்க:20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிலிருந்து வெளியேறிய அமெரிக்கப் படை