சந்திரயான் -2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி அதிகாலை 2:51 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வைப் பொதுமக்கள் காண கேலரி வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. விருப்பமம் உள்ளவர்கள் www.shar.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.