டெல்லி: 2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் சந்திராயன் 3 விண்ணில் ஏவப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், சந்திராயன் 3-க்கு சுற்றுப்பாதை கிடையாது. 2021 தொடக்கத்தில் அதில் விண்ணில் ஏவப்படும். நிலவின் தென் துருவத்தில் அதை தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரும்புச் சத்து நிறைந்த பாறைகள் நிலவில் உள்ளது என்பதை இதற்கு முன்பு அனுப்பிய செயற்கைக்கோளின் புகைப்படத்தின் மூலம் அறிய முடிகிறது. இரும்பு துருப்பிடிக்க தண்ணீரும். ஆக்சிஜனும் அவசியம், அவை அங்கு இருப்பதாக தகவல் ஏதுமில்லை. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் 2022ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.