ETV Bharat / bharat

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டிலிருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது சந்திரயான்-2 - சந்திரயான்-2

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து இன்று மதியம் 2.53 மணிக்குச் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டிலிருந்து  சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாகப் பிரிந்தது.

சந்திரயான்-2
author img

By

Published : Jul 22, 2019, 3:10 PM IST

Updated : Jul 22, 2019, 3:21 PM IST

சுமார் 400 டன் எடையும் 44 மீட்டர் உயரமும் கொண்ட இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் சற்று நேரத்துக்கு முன் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், விண்ணில் ஏவப்பட்டுச் சரியாக 15 நிமிடங்கள் கழித்து அதாவது 3 மணியளவில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டிலிருந்து சந்திரயான் 2 விண்கலம் தனியே பிரிந்தது. தற்போது பிரிந்து சென்றுள்ள சந்திரயான்-2 விண்கலம் முதலில் பூமியின் புவி வட்டப்பாதையில் 16 நாட்கள் சுற்றும். பின் நிலவை நோக்கி ஐந்து நாட்கள் பயணித்து தனது 21ஆவது நாளில் அது நிலவின் சுற்று வட்டப் பாதையைில் நுழையும்.

நிலவின் வட்டப்பாதையில் இதேபோல 27 நாட்கள் வட்டமிடும் சந்திரயான் 2 சரியாக 54ஆவது நாளில் நிலவின் தென்பகுதியில் தரையிறங்கவுள்ளது. சந்திரயான் 2 தற்போது வரை திட்டமிட்ட பாதையில் மிகத் துல்லியமாக சென்றுகொண்டிருக்கிறது.

Intro:Body:Conclusion:
Last Updated : Jul 22, 2019, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.