ETV Bharat / bharat

'டெல்லி வன்முறை... பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட விருப்பம்' டெல்லி ஆளுநருக்கு சந்திரசேகர் ஆசாத் கடிதம்!

author img

By

Published : Feb 25, 2020, 12:50 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடைபெற்று வரும் போரட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து வன்முறை ஏற்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களை பார்வையிட விரும்புவதாக டெல்லி ஆளுநருக்கு பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் கடிதம் எழுதியுள்ளார்.

Chandrashekhar Azad  violent in Delhi  CAA protest in Delhi  Bhim Army chief letter to Delhi LG  Delhi's Lieutenant Governor Anil Baijal  பீம் ஆர்மி சந்திர சேகர ஆசாத்
பீம் ஆர்மி சந்திரசேகர ஆசாத்

டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் நேற்று வன்முறை வெடித்தது. குடியரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கும் அதனை எதிர்ப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு காவலர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர ஆசாத், டெல்லி ஆளுநர் அனில் பைஜாலுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ”மோதல் நடந்த வடகிழக்கு டெல்லியைப் பார்வையிட விரும்புவதாகவும், அவ்வாறு பார்வையிடச் செல்லும்போது தனக்கு உரிய காவல் பாதுகாப்பை வழங்க டெல்லி காவலர்களுக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தான் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின மக்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதாகவும் கலவரம் நடந்துள்ள இடத்தில் உள்ள சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களின் பாதுகாப்பு கவலை கொள்ளக்கூடியதாக உள்ளதாக இருக்கிறதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஷாஹீன் பாக் போராட்டம்: மத்தியஸ்தர்கள் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.