ETV Bharat / bharat

பீம் ஆர்மிக்கு உதவும் பகுஜன் சமாஜ் கட்சியினர் - க்ளைமாக்ஸை எட்டிய மாயாவதி அரசியல்! - ஆசாத்

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சி ராம் பிறந்தநாளன்று பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தான் தொடங்கவுள்ள புதிய கட்சியை பற்றி அறிவிக்கவுள்ளார்.

பீம் ஆர்மிக்கு உதவும் பகுஜன் சமாஜ் கட்சியினர்

author img

By

Published : Mar 12, 2020, 5:19 PM IST

பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தேர்தல் அரசியலில் களம்காணவுள்ளார். புதிதாக தான் தொடங்கப்போகும் கட்சி பற்றிய அறிவிப்பை பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சி ராம் பிறந்தநாளன்று (மார்ச் 15) அறிவிக்கவுள்ளார்.

இதுதொடர்பாக பீம் ஆர்மியின் செய்தித் தொடர்பாளர், ஆசாத் பகுஜன் கட்சி, பகுஜன் அவாம் கட்சி, ஆசாத் சமாஜ் கட்சி ஆகிய மூன்று பெயர்கள் முடிவு செய்யப்பட்டன. அதில் தலைவர்கள் உட்பட அதிகமானோர் ‘ஆசாத் பகுஜன் கட்சி’ என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்த பின்பு கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கட்சியில் உறுப்பினர்களை இணைப்பது, கட்சியின் நோக்கம், தேர்தல் அறிக்கை குறித்து மார்ச் 15 அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

பீம் ஆர்மி தனது மாணவர் அமைப்பை முன்பே தொடங்கிவிட்டது. புதிய கட்சியின் அறிவிப்புக்கு பின், பீம் ஆர்மி அக்கட்சியின் சமூக மற்றும் கலாசார அமைப்பாக செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் புதிய கட்சி தொடங்குவதை பற்றி பீம் ஆர்மி பரப்புரையை தொடங்கிவிட்டது. பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர்கள் உட்பட ஒடுக்குமுறையை சந்திக்கும் அனைத்து மக்களும் தனது கட்சிக்கு ஆதரவு தரும்படி சந்திரசேகர் ஆசாத் அழைப்பு விடுத்துள்ளார்.

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பீம் ஆர்மி உடன் நிற்கிறது. எனவே புதிய கட்சியிலும் அவர்களது பங்களிப்பு இருக்க வேண்டும் விரும்புகிறது.

இது ஒருபுறமிருக்க, பீம் ஆர்மியின் புதிய கட்சி வருகை உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கியை பாதிக்கும் என கூறப்படுகிறது. பீம் ஆர்மியின் தேர்தல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஏப்ரல் முதல் வாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கூட்டத்துக்கு மாயாவதி ஏற்பாடு செய்திருப்பதாகவும், பீம் ஆர்மியின் நடவடிக்கைகளை அவர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர்கள் சிலர் ஆசாத்துடன் நட்புறவு பாராட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 2ஆம் தேதி லக்னோ சென்ற சந்திரசேகர் ஆசாத், பகிதரி சங்கல்ப் கூட்டணியின் இணைய விருப்பமிருப்பதாக தெரிவித்திருந்தார்.

பகிதரி சங்கல்ப் கூட்டணி என்பது 2022 உபி சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க 5 சிறிய கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணி ஆகும். பீம் ஆர்மியின் தலைவர் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.