கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், வெளியே சென்று வந்தால் கிருமி நாசினி உபயோகித்து கைகளை கழுவ வேண்டும் மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் மக்கள் பொது இடங்களில் மாஸ்க் இல்லாமல் சுற்றித்திரிவது வாடிக்கையாக உள்ளது.
இதைச் சரிசெய்யும் வகையில், சண்டிகர் யூனியன் பிரதேசம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்," சண்டிகர் மக்கள் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் இல்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.
தனிப்பட்ட அல்லது அலுவலக வாகனங்களில் பயணம் செய்யும் மக்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். aதுமட்டுமின்றி, அலுவலகத்தில் பணிபுரியும் நேரத்திலும் ஊழியர்கள் மாஸ்க் அணிகிறார்களா என்பதை நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி... சைக்கிளில் புதுச்சேரிக்கு பயணம் - மனைவி மீதான கணவனின் காதல்