கடந்த 2014 ஆம் அண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரை செய்து வந்தது. அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர், "மோடியால் பிரதமராக முடியாது, வேண்டுமென்றால் அவருக்கு டீகடை வைத்துக் தருகிறோம் டீ விற்கட்டும்" என்று கடுமையாக விமர்சித்தார். மோடியை மணிசங்கர் ஐயர் இவ்வாறு விமர்சித்ததால், காங்கிரஸ் கட்சி மணிசங்கர் ஐயரை தற்காலிகமாக நீக்கியது.
இருப்பினும் இந்த கருத்து பெரிய சர்ச்சையை எற்படுத்தியது. அதை பாஜக சரியாக பயன்படுத்தி ஆட்சியை பிடித்தனர். குறிப்பாக பரப்புரை மேடைதோறும் 'சாய்வாலா சாய்வாலா' என்று கூறியே வாக்குகள் கேட்டு, அதில் பயனைடைந்தனர்.
இந்நிலையில், அரசியலமைப்பின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்து ஈடிவி பாரத் மணி சங்கர் அய்யர் அளித்த பேட்டியின் போது, பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவரின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. காஷ்மீர் விவகாரம் பற்றி மட்டும் கேள்வி எழுப்புங்கள். மற்ற விவகாரங்கள் பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை" என்றார். இதற்கு செய்தியாளர்கள் எந்த கேள்வி கேட்க வேண்டும் என்பது குறித்து நீங்கள் சொல்ல கூடாது என செய்தியாளர் பதிலளித்தார்.