வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் குறைந்துள்ளதால் மாநில அரசுகளுக்கான இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகையாக சுமார் 35 ஆயிரத்து 298 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.
மேலும் நாளை நடக்கவிருக்கும் 38ஆவது சரக்கு மற்றும் சேவை வரி கலந்தாய்வு (ஜிஎஸ்டி கவுன்சில்) கூட்டத்தில் புகையிலைப் பொருள்கள், சிகரெட்கள், ஆட்டோமொபைல், நிலக்கரி ஆகியவற்றின் சரக்கு மற்றும் சேவை வரி குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பட்ஜெட் குறித்து தொழில்துறை பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை