உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவிவரும் நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான ப. சிதம்பரம் கூறியதாவது:
கொரோனா பெருந்தொற்றின் பரவலைத் தடுக்க மத்திய அரசு போதுமான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யவில்லை. சார்க் அல்லது ஜி-20 நாடுகளுடன் பிரதமர் சந்திப்பு நடத்தியது குறித்து எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
எனது கேள்வி என்னவென்றால் நாம் முன்னால் இருக்கிறோமா அல்லது பின்னால் இருக்கிறோமோ என்பதுதான். மத்திய அரசு மாறுபட்டதாக இருந்தாலும், மாநில அரசுகள் சிறந்த நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
அந்த வகையில் மாநில முதலமைச்சர்களுடன் காணொலி கலந்தாய்வில் ஒரு மாநாடு நடத்த வேண்டும். ஏனெனில் கொரோனா பெருந்தொற்று விகிதம் கவலை அளிக்கிறது. நாட்டில் பல்வேறு சோதனை வசதிகள் இல்லை. இதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
சென்செக்ஸ் ஒரு குறிகாட்டியாகும். அதன் வீழ்ச்சி குறித்து நாம் வருத்தப்பட வேண்டும். நாம் இன்னும் அடிப்படை கேள்விகளை எழுப்ப வேண்டும். இன்று அரசு என்ன செய்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 ஆக உயர்த்தியுள்ளது.
போக்குவரத்துத் துறை ஏற்கனவே வீழ்ச்சியடைந்துள்ளது. அவர்களின் வருவாய் ஏற்கனவே குறைந்துவிட்டது. இந்நிலையில் எரிபொருள்கள் விலையேற்றப்பட்டுள்ளது. இது கோரிக்கையை அடக்குவதற்கான நேரம் அல்ல. தூண்டுவதற்கான நேரம். அரசு நேர்மாறாக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு நாடு முழுக்க 17 வெளிநாட்டினர் உள்பட மொத்தம் 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 'ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் அரசு வேலை' - முனைப்பு காட்டும் பஞ்சாப் அரசு!