தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் (National Panchayati Raj Day) ஆண்டுதோறும் ஏப்ரல் 24ஆம் தேதி நாட்டில் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”புதிய இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா, கிசான் சம்மன் நிதி, ஃபசல் பீமா யோஜனா போன்ற மத்திய அரசின் திட்டங்கள் கிராமப்புற வளர்ச்சிக்கு ஒரு புதிய வழியை ஏற்படுத்தியுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விவசாயிகள், கிராமப்புற வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துகிறது.
ஒவ்வொரு கிராமத்திற்கும் சாலைகள், மின்சாரம், குடிசை இல்லாத வீடுகள், கழிப்பறைகள், சமையல் எரிவாயு ஆகியவற்றை கிராம மக்களுக்கு வழங்குவதன் மூலம், அரசு அவர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
கிராமங்கள் நமது பாரம்பரியத்தின் அடித்தளம் அவற்றின் வளர்ச்சியில்தான் நாட்டின் வளர்ச்சி அமைந்துள்ளது, இதற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கியப் பங்கு வசிக்கின்றன" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி திட்டங்களை அறிவிக்கும் பிரதமர்