சிவில் லிபர்டி பீப்பிள்ஸ் யூனியன் பொது கூட்டத்தில் பேசிய மேதா பட்கர், நாட்டின் முக்கிய பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற தேவையற்ற விஷயங்களை மத்திய அரசு செய்துவருகிறது.
சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றைக்கொண்டு நாட்டின் எதிர்காலத்தை அழிக்க மத்திய அரசு சதித்திட்டம் தீட்டுகிறது. தனது அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு இதனை செய்துவருகிறது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களையோ, போராட்டகாரர்களையோ சந்திக்க மத்திய அரசுக்கு தைரியமில்லை. போராட்டத்தை நடத்திவரும் மாணவர்களுக்கும், இஸ்லாமிய பெண்களுக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிஏஏ-வுக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல் துறையினர் எடுத்த நடவடிக்கை குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்தனர். பல்வேறு அமைப்புகளின் சமூக செயற்பாட்டாளர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: இந்து மகாசபையை எதிர்த்தவர் நேதாஜி - மம்தா புகழாரம்