இது குறித்து ஈடிவி பாரத்திடம் அவர் பேசுகையில், "நாட்டில் போதிய அளவு உரம் உள்ளது. 30 பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இது பற்றி பொதுமக்கள், நிபுணர்களிடம் கருத்துக் கேட்கப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்படும்.
விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும் என மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. வரும் காலத்தில் அது நடக்கும் என நம்புகிறோம். மருந்து, மாத்திரைகளுக்கு இந்தியாவில் தட்டுப்பாடு இல்லை. தேவைக்கும் அதிகமாகவே மருந்து உள்ளது. மற்ற நாடுகளுக்கு மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. இதனால் உலக நாடுகள் இந்தியாவை பாராட்டி வருகின்றன.
என்95 முகக் கவசங்களின் விலையை 47 விழுக்காடு வரை குறைத்துள்ளோம். இந்த முகக் கவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அதன் விலை அதிகரிக்கக் கூடும் என்பதைக் கருத்தில் கொண்டே அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.
கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதில் கேரள மாநிலம் கையாளும் முறை சிறப்பான ஒன்று. வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களாலேயே அங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உள்ளாட்சி நிர்வாகங்களின் உதவியோடு சமூக பரவலை கேரளா கட்டுப்படுத்தியுள்ளது. மத்திய - மாநில அரசுகளின் ஒருசேர்ந்த முயற்சியினாலேயே இதனை உண்மையாக்க முடிந்தது" என்றார்.
இதையும் படிங்க : ஆம்பன் பேரழிவு : பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிதி அளித்த அமெரிக்க தொண்டு நிறுவனம்!