டெல்லி: மளிகைக் கடை, காய்கறிக் கடை போன்று தினசரி மக்களுடன் தொடர்பில் இருக்கும் வியாபாரிகள் கரோனா நோய்க் கிருமியின் அதீத பரப்பிகளாக வலம் வர சாத்தியகூறுகள் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து மாநில அரசுகளுக்கு, ஒன்றிய பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில், “புதிய நகரங்களில் தற்போது கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. கரோனா நோயாளிகளை ஏற்க மறுக்கும் அவசர ஊர்திகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது.
இங்கு கோவிட்-19 நோயாளிகளுடன் தொடர்புடையவர்களை கண்டறிவது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்புடையவர்கள் 72 மணிநேரங்களில் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்கள், நெருங்கிய குடியிருப்பு பகுதிகள், சிறைச்சாலைகள், காப்பகங்கள் தனிதிறனுடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கோழிக்கோடு விமான விபத்து : விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
மக்களுடன் நேரடி தொடர்பில் தினமும் இருந்து வரும் சிறு வணிகர்கள், மளிகைக் கடை உரிமையாளர்கள், காய்கறி கடை உரிமையாளர்கள் மட்டுமில்லாமல், அங்குள்ள விற்பனையாளர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதனை அனைத்து மாநில, ஒன்றிய பிரதேச அரசுகள் உறுதிபடுத்த வேண்டும். இவர்கள் கரோனா நோய் கிருமியின் அதீத பரப்பிகளாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.