அக்டோபர் 31ஆம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் 144ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படவுள்ளது. அதனை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இது குறித்து உள் துறை அமைச்சகம் சார்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், ”சுதந்திர இந்தியாவின் முதல் உள் துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் தியாகத்தைப் போற்ற வேண்டும். அவரது பிறந்தநாளில் படேலின் புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்த வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள், தேச ஒற்றுமை தினம் அனுசரிக்கப்பட்டுவரும் நிலையில், ரன் ஃபார் யூனிட்டி (run for unity) என்ற மாரத்தான் போட்டி நடக்கவுள்ளது.
மேலும் மத்தியில் பாஜக அரசு பதவியேற்றது முதல் காங்கிரஸ் அரசின் சாதனைகளையும், தலைவர்களையும் இருட்டடிப்பு செய்யும் வேலையில் தீவிரமாக இயங்கிவருகிறது எனவும் இந்தியாவின் முதல் பிரதமர் நேருவை இருட்டடிப்பு செய்வதற்காகவே பாஜக சர்தார் வல்லபாய் படேலை கொண்டாடுகிறது என சில காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.
இதையும் படிக்கலாமே: முடிவுகளை எடுப்பதில் திறனற்றவர் மன்மோகன் சிங் - பியூஷ் கோயல்