கரோனா பாதிப்பு காரணமாக வெளிநாட்டு விமானப் போக்குவரத்து தற்போது முடக்கத்தில் உள்ள நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை, மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
குறிப்பாக, கேராள மாநிலதத்திற்கு வளைகுடா நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அம்மாநில அரசு முக்கிய உத்தரவை பிறப்பிக்க முடிவெடுத்துள்ளது.
அதன்படி, கேரள மாநிலத்திற்கு வரும் வெளிநாட்டினர் அனைவரும் தனக்கு கோவிட் - 19 பாதிப்பு இல்லை என்ற சான்றிதழைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்கள் கேரளா வரும் தேதியிலிருந்து மூன்று நாள்களுக்குள் கரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் இந்த உத்தரவுக்கு அம்மாநில எதிர்கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியக் கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றன. ஏற்கனவே வெளிநாட்டில் வசிக்கும் கேரள மாநிலத்தைச் சேர்தவர்கள் கரோனா தக்கத்தால் பெரும் அழுத்தத்திற்குள்ளான நிலையில் இது போன்ற உத்தரவு அவர்களுக்கு மேலும் சுமையை அளிக்கும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாநில உயர் நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்குத் தொடுத்த நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசின் முடிவு குறித்து கேரள உயர் நீதிமன்றம் கேட்டது. கேரள அரசின் முடிவுக்கு ஆட்சேபணையில்லை எனத் தெரிவித்த மத்திய அரசு கோவிட் - 19 சான்று திட்டத்தை கேரள அரசு அமல்படுத்தலாமென அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஜூன் 17ஆம் தேதிவரை கேரள மாநிலத்திற்கு 84 ஆயிரத்து 915 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள நிலையில், அவர்களில் 713 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹஜ் பயணம் ரத்து : சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அறிவிப்பு