ETV Bharat / bharat

குடிநீர் சேமிப்பும் மத்திய அரசின் நடவடிக்கைகளும்! - குடிநீர் பாதுகாப்பும் மத்திய அரசின் நடவடிக்கைகளும்

மழை நீர் சேகரிப்பு திட்டத்தையும் சாக்கடை தண்ணீரை மறு சுழற்சி செய்யும் திட்டத்தையும் செயல்படுத்த சமூகத்தில் உள்ள அனைத்து மக்களின் ஈடுபாடும் தேவை.

Water
author img

By

Published : Nov 17, 2019, 10:00 PM IST

மனித இனம் வாழ்வதற்கு உணவை விட தண்ணீர் முக்கியமானது. தண்ணீர் இன்றி மனிதர்களால் வாழவே முடியாது. எனவே தான், தண்ணீர் பெற்றுகொள்வதை வாழ்வுரிமையாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. குடிநீர் வழங்குவதை அரசின் கடமையாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். பாகிரதா திட்டம் மூலம் குடிநீர் வழங்க திட்டமிட்டள்ளதாக ஜல் சக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்குள் ஜல் ஜீவன் திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள 14.60 கோடி குடும்பங்களுக்கு தண்ணீர் வழங்க திட்டமிட்டுள்ளதாக ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

ஜல் ஜீவன் திட்டத்திற்கு தோராயமாக 3.60 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவிப்பின்போதே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை குறிப்பிட்டிருந்தார். மாநில அரசுடன் மத்திய அரசு கூட்டுச் சேர்ந்து நல் சே ஜல் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாகவும் மாநிலங்களின் தனிப்பட்ட தேவையின் அடிப்படையில் ஜல் ஜீவன் திட்டம் முறைப்படுத்தப்படவுள்ளதாகவும் மூன்று மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. மாநிலங்களின் ஈடுபாட்டின் மூலமே இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என திட்டத்தின் செலவை அறிவித்த பின் ஷெகாவத் தெரிவித்தார்.

நீர்நிலை
நீர்நிலை

நாடு முழுவதும் 256 மாவட்டங்கள், 1,592 தொகுதிகளில் ஜல் சக்தி அபியான் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலங்களின் உதவியோடு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேவையற்ற செலவுகளை குறைத்து, இதுபோன்ற முக்கிய திட்டங்களுக்கு நிதியை பயன்படுத்தினால் கோடிக்கணக்கான மக்களின் தாகத்தை போக்கலாம்.

தண்ணீர் வாரம்
தண்ணீர் வாரம்

குடிநீரை பெற பல கிமீ தொலைவு நடக்கும் மக்களின் அவலநிலையை விவரிக்கமுடியாது. பெண்களும் குழந்தைகளும் தண்ணீரை பெற்றுவருவதற்கு 20 கோடி மணி நேரங்களை செலவழிப்பதாக யுனிசெப் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 21 மாநிலங்களில் உள்ள 153 மாவட்ட மக்கள், அர்செனிக் தனிமம் அதிகம் உள்ள தண்ணீரை குடித்துவருவதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. யுரேனியத்தால் மாசடைந்த நிலத்தடி நீரை 16 மாநிலங்களில் உள்ள மக்கள் பயன்படுத்திவருவதாக டியூக் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 60 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என நிதி ஆயோக் தகவல் தெரிவித்துள்ளது. நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை கேப் டவுனில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையே நினைவுபடுத்திகிறது. அடிப்படை தேவைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது. தொழிற்சாலை, விவசாய கழிவுகளால் கங்கை ஆறு உள்ளிட்ட பல ஆறுகள் மாசடைந்துள்ளது.

கஜேந்திர ஷெகாவத்
கஜேந்திர ஷெகாவத்

தண்ணீரை மட்டும் பாதுகாக்க தவறிவிட்டால், நிலத்தடி நீர் வற்றிவிடும். நீர்த்தேக்கங்கள் காலியாகிவிடும். இந்த எச்சரிக்கையின் மூலம் நாம் நமது தூக்கத்தை கலைத்து கொள்ள வேண்டும். புதிய தேசிய நீர் கொள்கையை அடுத்த ஆறு மாதங்களில் திட்டக்குழுவிலிருந்த மிஹிர் ஷா தலைமையிலான குழு வகுக்கும் என கூறப்படுகிறது. ஷா தலைமையிலான குழு இது தொடர்பான மசோதாவை முறைப்படுத்த பல சவால்களை சந்திக்கவுள்ளது. இதன் மூலம் தண்ணீரை பெரிய அளவில் பாதுகாக்க முடியும்.

நிலத்தடி நீர் வற்றுவதை குறைப்பதற்கு ஆஸ்திரேலியா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறையை குறைக்க பல நடவடிக்கைகளை இந்த நாடுகள் எடுத்துவருகிறது. தண்ணீர் மாசை குறைப்பதற்கும் குடிநீரை சேமிப்பதற்கும் சீனா 12 லட்சம் பேரை நியமித்துள்ளது. இதன் மூலம் சீனா முழுவதும் 95 விழுக்காடு ஆறுகள் 2030ஆம் ஆண்டுக்குள் சுத்தப்படுத்தப்படவுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தபடாததால் பல நீர்நிலைகளை இந்தியா இழந்துள்ளது. கடந்த காலங்களில் செய்த தவறை திருத்திக் கொள்ள, புதிய நீர் கொள்கை அமல்படுத்த வேண்டும். வாழ்வாதாரத்தின் அடிப்படையே தண்ணீர் பாதுகாப்பு என்பதை விவசாயிகள் முதல் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். ஊழலால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயலிழந்துள்ளது.

மழை நீர் சேகரிப்பு திட்டத்தையும் சாக்கடை தண்ணீரை மறு சுழற்சி செய்யும் திட்டத்தையும் செயல்படுத்த சமூகத்தில் உள்ள அனைத்து மக்களின் ஈடுபாடு தேவை. இந்தியாவில் உள்ள குழாய்களில் இ கோலி என்ற பாக்டீரியா உள்ளதால், பயன்படுத்துவதற்கு தகதியற்றதாக தண்ணீர் மாறுகிறது. இதுபோன்ற தவறுகள் செய்வதிலிருந்து திருத்திக் கொண்டால்தான், எதிர்கால தலைமுறைகளுக்கு நாம் பொறுப்புணர்வுடன் இருந்ததை தெரிவிக்கமுடியும்.

Intro:Body:

Water Ministry

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.