ETV Bharat / bharat

'மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களை முதலமைச்சர் மறைக்க முயல்கிறார்' - ஆளுநர் கிரண்பேடி - central govt implementing a lot of good schemes

புதுச்சேரி: மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு நிறைய திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், ஆனால் அதனை முதலமைச்சர் நாராயணசாமி மறைக்க முயல்வதாகவும் ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

kiran
kiran
author img

By

Published : Apr 25, 2020, 4:07 PM IST

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும், மக்களின் சுகாதாரத்தை உறுதிசெய்யவும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டிய இச்சமயத்தில் புதுவை முதலமைச்சர் திரும்பவும் உண்மைகளைத் தவறாகச் சித்தரிப்பதுடன் அரசியல் விளையாட்டை மேற்கொள்வது வருத்தமாகவுள்ளது.

மத்திய அரசுக்கும் ஆளுநருக்கும் எதிராக அவர் தொடர்ந்து பல்வேறு தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். குறிப்பாக மத்திய அரசிடமிருந்து சிறு உதவி கூட கிடைக்கவில்லை எனக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது.

மத்திய அரசு பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 83 ஆயிரம் பேருக்கு தலா 500 ரூபாய் வீதம் 4.15 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பிரதான் மந்திரி கிசான் சமான் திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 299 பேருக்கு தலா 2,000 ரூபாய் வீதம் 1.85 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆண்டு நிதி ஒதுக்கீடு மத்திய அரசிடமிருந்து 424.5 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்குக் கூடுதலாக 3.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நலவாழ்வுத் திட்டங்களுக்காகவும் மத்திய அரசிடம் மாநில அரசு நிதி பெற்றுள்ளது. இவை அனைத்தும் பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்று அடைந்துள்ளன. ஆனால் இவற்றையெல்லாம் முதலமைச்சர் மறைக்க முயற்சி செய்கிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மக்கள் கட்டுப்பாடின்றி வெளியே வந்தால் 2 நாள்களுக்கு ஒரு முறை கடை திறக்கப்படும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.