கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அதனடிப்படையில் மாநில அரசுகளும் ஊரடங்கு அமலை முறையாகக் கடைப்பிடித்துவருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா பாதிப்பால் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர், 133 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தற்போது மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, மகராஷ்டிராவில் 302 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 120 பேரும், தெலங்கானாவில் 94 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 103 பேரும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கேரளாவில் 241 பேருக்கும், தமிழ்நாட்டில் 124 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 37 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பலி எண்ணிக்கை