உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸால் சீனாவைவிட அதிகளவில் இழப்புகளை அமெரிக்கா சந்தித்துள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸால் மேலும் இழப்புகளை சந்திக்காமல் இருக்க தங்களது நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோருக்காக சில முக்கிய விதிகளை அமெரிக்க அரசு அமல்படுத்தியுள்ளது.
இதன்காரணமாக, அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாடு திரும்ப முடியாமல் தவித்துவருகிறார். இவர், தனது பணிகளை முடித்துக்கொண்டு இம்மாத தொடக்கத்திலேயே இந்தியா வர முற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருந்தபோதிலும், அலுவலகத்தின் முக்கிய கூட்டங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர் நடத்திவருவதாக தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயத்தில், சுனில் அரோரா உள்ளிட்ட அலுவலர்கள் தங்களுடைய ஆண்டு வருமானத்திலிருந்து முப்பது விழுக்காடு தொகையினை கரோனா நிவாரண நிதியாக வழங்க தாமாக முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா:மத்திய கிழக்கு குழந்தைகளின் நலனுக்குக் கூடுதல் நிவாரணம் தர யுனிசெப் கோரிக்கை