1947 அக்டோபர் 27ஆம் தேதியன்று காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த காலாட்படையினர், எதிரிகளின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தனர். சீக்கிய படைப்பிரிவின் முதல் பட்டாலியனின் பணியாளர்களால் இந்த வெற்றி கிடைத்தது.
அன்றுமுதல், அக்டோபர் 27ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ நிகழ்வின் நினைவாக காலாட்படை தினம் அனுசரிக்கப்படுகிறது. பல இடங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று, இந்திய ராணுவ காலாட்படை தினத்தையொட்டி தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவணே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.