இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஜம்மு காஷ்மீரிலுள்ள ஸ்ரீநகர் விமானப்படைத் தளத்திலிருந்து எதிரிகளுடன் போரிட்ட காலாட்படையினர் காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர். இது இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நடைபெற்ற முதல் ராணுவத் தாக்குதல்.
அவர்களின் இந்த வீர செயலை நினைவு கூறும் வகையில் , போரில் வெற்றி கொண்ட அக்டோபர் 27ஆம் நாள் ஆண்டு தோறும் காலாட்படை தினமாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு முப்படைகளின் தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி முகுந்த் நாரவனே உள்ளிட்ட ராணுவத்தினர் பலர் இன்று, போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினர்.