செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் அல்லது சி.சி.எம்.பி என்பது ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஒரு இந்திய உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமாகும்.
இந்நிறுவனம் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படுகிறது.
நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில், இத்தொற்று நோயை துல்லியமாக கண்டறியும் கருவிகள் விரைவில் வரவுள்ளதாக சிசிஎம்பி நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் இயக்குனர் ஆர்.கே. மிஸ்ரா கூறுகையில், “கரோனா வைரஸ் தொற்றுநோய் அறிகுறிகளை கண்டறியும் கருவிகளை நாங்கள் சோதித்துவருகிறோம். குறைந்தது இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இந்நோயை துல்லியமாக கண்டறியும் கருவிகளை கொண்டுவரலாம்” என்றார்.
தெலுங்கானா மாநிலத்தில் ஐந்து அரசு சோதனை மையங்கள் உள்ளன. கரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கும். ஆகவே இது குறித்தும் ஆராய்ச்சிகள் தொடர்ந்துவருகிறது.
இதையும் படிங்க: கரோனாவுக்கு எதிரான போரை 21 நாள்களில் வென்று காட்ட வேண்டும் - பிரதமர் மோடி