இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம், ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டிருந்த சிபிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடத்தப்படும் என கடந்த சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது.
முன்னதாக, 3 ஆயிரம் தேர்வு மையங்களில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது தேர்வு மையங்கள் 12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் மாணவர்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றும் வகையிலும், தேர்வு மையங்களுக்கு செல்லும் பயண தூரத்தை குறைக்கும் வகையிலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ விடைத்தாள்களை ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே மதிப்பீடு செய்ய 3 ஆயிரம் சிபிஎஸ்சி பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. அந்தப்பள்ளிகள் விடைத்தாளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு அனுப்பி மதிப்பீடு முடிந்த பின்னர் சேகரிக்கும் பணியைச் செய்து வருகிறது", என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வி நுழைவுத் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பு சிபிஎஸ்சி தேர்வுகளை நடத்தி முடிக்கும் வகையில் இந்த தேர்வு அட்டவனை வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இணைய பாதுகாப்பு வழிகாட்டியை வெளியிட்டுள்ளது!