கரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பித்ததையடுத்து, சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, ஜூலை மாதம் தேர்வுகளை நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.
அதன்படி, ஜூலை 1ஆம் தேதிமுதல் 15ஆம் தேதிவரை 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது. டெல்லி தவிர்த்து பிற மாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி ஜூலை 13ஆம் தேதி தேர்வுகள் நிறைவுபெறுகின்றன. டெல்லியில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 3ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி தேர்வுகள் நிறைவுபெறுகின்றன.
தேர்வர்கள் கவனிக்க வேண்டியவை
- தேர்வு எழுதும் மாணவர்கள் சானிடைசர்கள் கொண்டுவர வேண்டும்.
- மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பெற்றோர் உறுதிசெய்ய வேண்டும்.
- முகக்கவசம் கட்டாயம் அணிந்துவர வேண்டும்.
- தேர்வு அறைகளில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்
- மாணவர்கள் தனித்தனியாக குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்த வேண்டும்
இதையும் படிங்க: 'வேலையை விட்டு விலகும் செவிலியர்' - தவிக்கும் மருத்துவமனைகள்