நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ-யின் இந்த முடிவை எதிர்த்தும், தேர்வுகளை ரத்து செய்யக்கோரியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு, “செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதற்கான சிபிஎஸ்இ முடிவை இந்திய ஒன்றியத்தின் சட்ட அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
சிபிஎஸ்இ-யின் இந்த முடிவால் மாணவர்களை மேலும் பாதிக்கும். இந்தத் தேர்வுகள் மாணவர்களின் முழு ஆண்டையும் பாதிக்கும். கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் தற்போது மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவது மாணவர்களை மேலும் பாதிக்கும்.
இதற்கான தீர்வை சிபிஎஸ்இ-யால் மாற்ற இயலாது. மாநிலங்களுக்கோ அல்லது பல்கலைக்கழகங்களுக்கோ நோட்டீஸ் வழங்குவதற்கான யோசனைக்கு முன், இது தொடர்பான வழக்குகளை இந்திய ஒன்றிய சட்ட அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்" என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.