யெஸ் வங்கி முறைகேடு விவகாரம் தொடர்பாக டி.ஹெச்.எஃப்.எல். நிறுவனர்கள் கபில் வதாவன், தீரஜ் வதாவன் ஆகியோர் மத்திய புலனாய்வு அமைப்பால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பிணையில் வரமுடியாத வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தனிமையிலிருந்த இருவரையும் மத்திய புலனாய்வு அமைப்பு கைதுசெய்து தனது காவலில் வைத்துள்ளது. யெஸ் வங்கி முறைகேடு தொடர்பாக கடந்த மார்ச் 7ஆம் கபில், தீரஜ் வதாவன் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் இருவரும் தலைமறைவானார்கள்.
பின்னர் கரோனா கட்டுப்பாடு காலத்தில் இவர்களின் இருப்பிடம் தெரியவந்தது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்திடம் சிபிஐ தடையில்லா சான்றிதழ் பெற்று இருவரையும் கைதுசெய்துள்ளது.
முன்னணி தனியார் வங்கியான யெஸ் வங்கி நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு வங்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இது தொடர்பாக நிதி முறைகேடு, ஊழல் புகாரில் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைதுசெய்யப்பட்டார்.
ஏற்கனவே கடனில் சிக்கித்தவித்த டி.ஹெச்.எஃப்.எல். நிறுவனத்திற்கு யெஸ் வங்கி சார்பில் 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த வங்கி நிறுவனத்திடமிருந்து சுமார் 600 கோடி ரூபாய் நிதியை ராணா கபூர், அவரது மனைவி, மூன்று மகள்கள் ஆகியோரின் வங்கிக் கணக்குகளுக்குச் செலுத்தப்பட்டதாக வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 2 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் சுந்தர் பிச்சை!