ETV Bharat / bharat

டி.கே. சிவகுமார் வீடுகளில் சோதனை: ரூ. 50 லட்சம் பறிமுதல் செய்த சிபிஐ! - கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் வீட்டில் சிபிஐ சோதனை

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் வீடுகளில் சிபிஐ அலுவலர்கள் இன்று (அக்.05) சோதனை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் வீட்டில் சிபிஐ சோதனை

author img

By

Published : Oct 5, 2020, 10:32 AM IST

Updated : Oct 5, 2020, 11:58 AM IST

கர்நாடக மாநிலம், சதாசிவ் நகரிலுள்ள காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் வீட்டில் இன்று (அக்.05) காலை சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தினர். தொடர்ந்து, அவரது சகோதரர் டி.கே. சுரேஷ் எம்.பி. வீட்டிலும் அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

மேலும், பெங்களூரிலுள்ள டோடலஹள்ளி, கனகபுரா, சதாசிவா நகர் ஆகிய இடங்களில் உள்ள டி.கே. சிவகுமாரின் வீடுகள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் என மொத்தம் 14 இடங்களில் சிபிஐ அலுவலர்கள் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் சிபிஐ இதுவரை ரூ. 50 லட்சத்தை கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ட்வீட் செய்துள்ளார். அதில், 'மோடி-எடியூரப்பா ஆகிய இரட்டையர்களின் கைப்பாவையாக சிபிஐ திகழ்ந்து, டி.கே.சிவகுமாரை சோதனை செய்வது கண்டிக்கத்தக்கது. எடியூரப்பா அரசாங்கத்தில் ஊழல் அடுக்குகளை சிபிஐ கண்டுபிடிக்க வேண்டும்.

அதாவது சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றினை வைத்து மோடி மற்றும் எடியூரப்பா அரசாங்கங்கள் செய்யும் மோசமான முயற்சிகளுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தலைவணங்கமாட்டார்கள் அல்லது தலைவணங்கமாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும்.

மக்களுக்காக போராடுவதற்கும், பாஜகவின் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்துவதற்கும் எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இது எங்களை வலிமைப்படுத்துகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ட்வீட்
ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ட்வீட்

இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி நடந்து வருகிறது - மகிளா காங். சுதா ராமகிருஷ்ணன்!

Last Updated : Oct 5, 2020, 11:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.