இந்த விசாரணையின் போது, முன்னாள் துணை பிரதமரும், பாஜக முன்னாள் தலைவருமான எல்.கே. அத்வானி, முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் கல்யாண் சிங், பாஜக மூத்த தலைவர்கள் எம்.எம்.ஜோஷி, உமா பாரதி, வினய் காட்டியார், சாத்வி ரிதம்பரா, சாக்ஷி மகாராஜ், ராம் விலாஸ் வேதாந்தி, பிரிஜி பூஷன் ஷரன் சிங் உள்ளிட்ட 32 பேர் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன் ஆஜராகி தங்களது வாக்குமூலங்களை அளிப்பர்.
முன்னதாக, இந்த வழக்கில் சேகரிக்கப்பட வேண்டிய அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ சேகரித்துவிட்டதாகக் கூறிய சிறப்பு நீதிபதி எஸ்.கே.யாதவ், சாம்பாட் ராய், லாலூ சிங், பிரகாஷ் ஷர்மா உள்ளிட்டோரை மார்ச் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலங்களை அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அதற்குள் நாடு தழுவிய பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விசாரணை தடைப்பட்டது.
இதனிடையே, மூன்று சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடுமாறு எதிர் மனுதாரர்களின் வழக்கறிஞர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் (மே) 18ஆம் தேதி கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையானது ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதுதொடர்பான விசாரணை நேற்று (புதன்கிழமை) முடிவுற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கால்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையினர் பின்வாங்கல்