கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியின் போது நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் ரோஷன் பெய்க். இவரை ஐஎம்ஏ முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ அலுவலர்கள் கைதுசெய்துள்ளனர்.
ஐஎம்ஏ சீட்டு நிறுவனத்தை மன்சூர் கான் என்பவர் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி, மக்களிடம் பணம் பெறப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் ரோஷன் பெய்க் தன்னிடம் ரூ.400 கோடி பெற்றுவிட்டு, திருப்பி தர மறுப்பதாக மன்சூர் கான் குற்றம்சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்த ரோஷன், பணம் பெறவில்லை என்றார்.
பின்னர் இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, மன்சூர் கான் துபாய்க்கு தப்பிய நிலையில், கடந்த ஆண்டு அவர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விசாரணையில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹத்ராஸ் விவகாரம்: உண்மை கண்டறியும் சோதனைக்குள்ளாகும் குற்றம்சாட்டப்பட்டவர்கள்!