புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய 7 டிஎம்சி காவிரி நீர் கிடைக்காததால் விவசாயம் குறைந்து வருகிறது. காவிரி நீர் ஒழுங்காற்று குழு நேற்று காரைக்காலில் வந்து குழுவின் தலைவர் நவீன்குமார், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய செயலர் நீரஜ் குமார் உள்பட 16 பேர் கொண்ட இந்த குழுவினர் தமிழ்நாட்டிலிருந்து காரைக்காலுக்கு காவிரி நீர் வரும் வழியை அளவீடு செய்யும் முறை குறித்து நல்லாத்தூர் அன்னவாசல் பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து 23ஆவது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் புதுச்சேரி தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கர்நாடக தலைமை பொறியாளர் சங்கர் கவுடா, புதுச்சேரி வளர்ச்சி ஆணையர் அன்பரசு, தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதன்மை செயலர் மணி வாசன், கேரள துணை தலைமை பொறியாளர் ஹரிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நான்கு மாநிலத்திற்கான காவிரி நீர் பங்கீடு அணைகளின் நீர்மட்டம், பருவமழை பொழிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக புதுச்சேரி வந்த இக்குழு சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினர்.
இதையும் படிங்க: கிரண்பேடிக்கு எதிரான வழக்கு - விசாரணைக்கு ஏற்றது உயர் நீதிமன்றம்!