உத்தரப் பிரதேச மாநிலத்தின் போக்ரி பர்ஹாத் பகுதியில் உள்ள ஆர்கே சிங் படேல் பெட்ரோல் பங்க்கில், நேற்று மாலை பாஜக எம்பி தனது காருக்கு டீசல் நிரப்ப வந்துள்ளார்.
அப்போது பாஜக எம்பியிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை திருடிவிட்டு, திருடிய ஐந்து பேரும் வாகனத்தில் வேகமாகச் சென்றுள்ளனர். அவர்களைப் பின்தொடர்ந்தும் யாராலும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மனைவியை கொன்றுவிட்டு போலீஸ் தற்கொலை!