புதுச்சேரி அரியாங்குப்பத்தில் தனியாருக்குச் சொந்தமான மாருதி ஐஸ் பிளான்ட் இயங்கிவருகிறது. இங்கிருந்து மீன்களை பதப்படுத்துவதற்கான பெரிய அளவிளான ஐஸ் கட்டிகள் கடைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்நிலையில் ஐஸ் பிளான்டில் திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டது. இந்த கேஸ் கசிவினால் அப்பகுதியில் வசித்துவந்த 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த புதுச்சேரி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். பின்னர் ஐஸ் பிளான்டில் தண்ணீர் பீய்ச்சி அடித்து கேஸ் கசிவை கட்டுப்படுத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு