ETV Bharat / bharat

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது வழக்கு!

author img

By

Published : Jan 15, 2021, 5:37 PM IST

இந்துக்களின் மனதை புண்படுத்திவருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Mamata Banerjee  Case filed against Mamata Banerjee  West Bengal Chief Minister Mamata Banerjee  All India Trinamool Congress (TMC)  மம்தா பானர்ஜி  சீதாமர்கி

சீதாமர்கி (பிகார்): மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி ஆகியோர் மீது பிகார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது வழக்குரைஞர் தாகூர் சந்தன் சிங், பிகார் சீதாமர்கி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும் அக்கட்சியின் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி ஆகியோர் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்படுகின்றனர்.

வழக்குரைஞர் தாகூர் சந்தன் சிங் பேட்டி!

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்தும், இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தவும் இதுபோன்ற அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. ஆகவே மம்தா பானர்ஜி, கல்யாண் சிங் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (இபிகோ) 295ஏ (மத அவமதிப்பு) மற்றும் 120 பி (குற்றச்சதி) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “மம்தா பானர்ஜி வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுகிறார்” என்றும் வழக்குரைஞர் தாகூர் சந்தன் சிங் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: வங்காளிகள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் - மம்தா அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.