ETV Bharat / bharat

சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மீது பாய்ந்த வழக்கு

லக்னோ: முசாஃபர்நகர் பகுதியில் நேர்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சாலை விபத்து
சாலை விபத்து
author img

By

Published : Jun 15, 2020, 12:46 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முசாஃபர்நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சகோதரர்கள் தங்களின் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சாலையின் தடுப்புச்சுவர் மீது இவர்களின் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்த உயிரிழந்தவரின் உறவினர்கள், NHAI எனப்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பராமரிப்பில் உள்ள இந்த சாலை குண்டும் குழியுமாக இருந்ததே விபத்திற்கு காரணம் என்றும், ஆகவே இதற்கு காரணமான அலுவலர்கள் மீது நவடடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதையடுத்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.