கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர். பகுதியில் முக்கியச் சாலையின் ஓரத்திலுள்ள நடைமேடையில் தேநீர் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையில் நடைமேடையில் செல்வோர், வாகன ஓட்டிகள், பயணிகள் வந்து தேநீர் அருந்திச் செல்வர்.
வழக்கம்போல் இந்தக் கடையில் நேற்று நான்கைந்து பேர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். மேலும், சிலர் நடைமேடையில் ஏறி நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கார் ஒன்று நடைமேடையில் ஏறி அங்கிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஏழு முதல் எட்டு பேர் வரை படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.