கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் மே 17ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் குறித்து விவரியுங்கள் என பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கடிதம் ஒன்றை ஏழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், " கரோனாவை பாதுகாப்பாக விரட்டும் நமது யுக்தி நாட்டின் பொருளாதரத்தை சரிந்துவிடாமல் மறுமலர்ச்சியின் பாதைக்கு எடுத்துசெல்ல வேண்டும். மாநிலங்களின் பொருளாதரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கரோனா காரணமாக நாட்டின் நிலைமை முற்றிலுமாக மாறுப்பட்டுள்ளதால், மாநிலங்களுக்கு வழக்கமாக வழங்கும் நிதியைவிட பாதிப்பை கண்டறிந்து அதற்கேற்பதான் 15ஆவது நிதி ஆணையம் வழங்க வேண்டும்.
ஊரடங்கால் வேலைகள், வணிகங்கள்,பொருளாதார வாய்ப்புகள் பலமடங்கு விழ்ச்சி அடைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் பஞ்சாபின் வருவாய் 88 விழுக்காடு குறைந்துள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்தி மக்களின் உயிரைக் காப்பாற்ற பஞ்சாப் அரசு அனைத்தையும் முயற்சிகளும் செய்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: கோர விபத்து: தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த 16 தொழிலாளர்கள் மீது ஏறிய சரக்கு ரயில்