புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெற்றது. வி.வி.பி. நகர் புதுச்சேரி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் புதுச்சேரி மகளிர் பாசறை செயலாளர் கௌரி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவரைத் தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நெடுஞ்செழியன் அக்கட்சி நிறுவனர் என். ரங்கசாமியுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளரான வெங்கடேசன் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி சுமிதாவிடம் வழங்கினார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் நடைபெற உள்ளது.
.