ETV Bharat / bharat

சீனப் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுகிறதா...? கரோனாவால் எழுந்தது போர்க்கொடி...!

சீனப் பொருள்களைப் புறக்கணிப்பதற்கான கோரிக்கை தற்போது சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது. அந்நாட்டு பொருள்களை தடை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக நீண்ட காலமாகவே விவாதங்கள் நடைபெற்று வந்தபோதிலும், அந்தக் கோரிக்கை கோவிட்-19 பிரச்னைக்கு பின்னர் உச்சத்தைத் தொட்டுள்ளது.

Chinese Products
Chinese Products
author img

By

Published : Jun 13, 2020, 3:55 PM IST

பிரதமர் நரேந்திர மோடியின் “உள்நாட்டுக்குக் குரல் கொடுப்போம்” (வோக்கல் ஃபார் லோக்கல்) என்ற பரப்புரை, இந்தியர்களை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்க ஊக்குவித்துள்ளது. “இதுபோன்ற சூழ்நிலைகளில், சீனாவின் தயாரிப்புகளை வாங்குவதற்கு யாருமே விரும்ப மாட்டார்கள். இந்த வாய்ப்பை இந்தியத் தொழில் நிறுவனங்கள் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்குவதைத் தடை செய்யுமாறு இறக்குமதியாளர்களிடம் வலியுறுத்தப் போவதாக தொழிற்சங்கங்களும் உறுதி அளித்துள்ளன. சீனப் பொருள்கள் இந்தியச் சந்தைகளில் வெள்ளம் போல் புகுகின்ற நிலைமை ஒன்றும் புதிது அல்ல.

இந்தியச் சந்தைகளில் சீனப் பொருள்களின் படையெடுப்பு பல ஆண்டுகளாகவே நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தான் அது மிக வேகமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் முன்னிலையில் உள்ள முதல் ஐந்து ஸ்மார்ட் ஃபோன்களில் நான்கு, சீனாவில் இருந்து வருபவை ஆகும். உண்மையில், இந்த நான்கு நிறுவனங்களுமே இந்தியாவில் 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெற்ற ஸ்மார்ட் ஃபோன் விற்பனையில் 73 விழுக்காட்டை வகிக்கின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் சீனாவில் உற்பத்தி நிறைவு செய்யப்பட்ட பொருள்களின் நுகர்வைக் குறைப்பதற்கும், அனைத்து இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு (சிஏஐடி) ஒரு பரப்புரை இயக்கத்தைத் தொடங்கி உள்ளது.

சிஏஐடி-யின் தேசிய பொதுச் செயலாளரான பிரவீண் கண்டேல்வால் இதுபற்றிக் கூறுகையில், நமது கூட்டமைப்பு 10,000 வர்த்தகச் சங்கங்களிடம் சீனப் பொருள்களை இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்த திட்டமிட்டுள்ளது.

ஈ-காமர்ஸுக்கு பிஏயூ!

தடை விதிக்க வேண்டும் என்று கடுமையான விவாதம் நடைபெற்று வந்தாலும் கூட, ஈ-காமர்ஸ் (மின்-வர்த்தகம்) பிரிவில் சீனத் தயாரிப்புகளே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஸியோமி, ரியல்மீ, ஒப்போ மற்றும் விவோ போன்ற சீன ஸ்மார்ட் ஃபோன் பிராண்டுகளுக்கான தேவை எவ்வித பாதிப்பும் இன்றித் தொடர்வதாக அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகியவை உறுதி செய்துள்ளன. சீனப் பொருள்களைப் புறக்கணிப்பது என்பது, சீனாவில் உருவான ஸ்மார்ட் ஃபோன் அல்லது டூத் பிரஷைப் புறக்கணிப்பதாகப் பொருள் கொள்ளப்படவில்லை. நாடு, அடிப்படை நிலையிலான வர்த்தகத்தைத் தாண்டிச் சென்று விட்டது. ஸியோமி (மி கிரெடிட்) மற்றும் ஒப்போ (ஓப்போ கேஷ்) ஆகியவை ஆன்லைன் கடனுதவிச் சேவைகளைத் தொடங்கி விட்டன.

இவற்றின் இலக்கு, இந்தியாவில் தனிநபர் கடனுதவித் திட்டங்கள் மூலமாக 50,000 கோடி ரூபாய்க்கான கடன்களை வழங்குவது ஆகும். ரூ. 7,500 கோடிக்கு மேல் நிகர மதிப்பு கொண்டுள்ள முதல் 30 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 18 நிறுவனங்களுக்கு, சீன முதலீட்டாளர்களால் நிதியுதவி வழங்கப்படுகிறது. தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் ரூ. 3.02 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளன. சீனாவின் பிரமாண்ட தொழில்நுட்பக் குழுமமான அலிபாபா, ஸ்நாப்டீல் நிறுவனத்தில் ரூ. 5,284 கோடியும், பேடிஎம்-மில் ரூ. 3,019 கோடியும் பிக்பேஸ்கட் நிறுவனத்தில் ரூ. 1,887 கோடியும் முதலீடு செய்துள்ளது.

சீனாவின் மற்றொரு பன்னாட்டு நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட், ஓலா மற்றும் சொமாட்டோவில் தலா ரூ. 1,509 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும், இந்தியாவில் பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளன. இந்தியச் சந்தையில் சீனாவின் குறுக்கீட்டைத் தடுத்தால், அதன் காரணமாக சீன முதலீடுகள் நின்று போக நேரிடும் என்று நிதித் துறை நிபுணர்கள் நம்புகின்றனர்.

மாற்று அணுகுமுறை

லடாக்கைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரும் கல்வியியல் சீர்திருத்தவாதியுமான சோனம் வாங்சுக், சீனாவில் தயாரிக்கப்படும் பொருள்களைப் புறக்கணிப்பதற்கான அழைப்பை விடுத்துள்ளார். சீனாவின் மென்பொருள் அல்லது செயலிகளில் இருந்து ஒரு வாரத்திலும், வன்பொருள், அத்தியாவசியமற்ற ஸ்மார்ட் ஃபோன்கள் அல்லது மடிக்கணினிகளில் இருந்து ஒரு ஆண்டிலும் அத்தியாவசியப் பொருள்களில் இருந்து சில ஆண்டுகளிலும் விடுபடுவதற்கான யோசனைகளை அவர் வழங்கியுள்ளார்.

சீனத் தயாரிப்புகளின் விலை மலிவாக இருப்பதனால் தான், நுகர்வோர் அவற்றின் பக்கம் சாய்கின்றனர். விலை மட்டத்தில் போட்டியிட வேண்டும் என்றால், உள்நாட்டு நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளையும் மானியங்களையும் இந்திய அரசு கட்டாயம் அதிகரிக்க வேண்டும். இந்தியா தன்னிறைவு கொண்டதாக உருவாக வேண்டும் என்றால், ஆத்ம நிர்பர் பாரத் (தன்னிறைவு பாரதம்) போன்ற முன்முயற்சிகள் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், சீனப் பொருள்களைப் புறக்கணித்தல் என்பது சாத்தியமற்ற இலக்காகவே நீடிக்கும்.

உலகமயமாக்கல் மற்றும் பொருளாதார தாராளமயமாக்கல் என்ற அடிப்படையில், ஒரு நாட்டில் தயாரிக்கப்படுகின்ற பொருள்களை உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் விற்க முடியும். இந்தியாவின் இறக்குமதிகளில் சீனாவின் பங்கு 3 விழுக்காடு மட்டுமே. ஆனால் இந்தியாவின் ஏற்றுமதிகளில் அதன் பங்கு 5.7 விழுக்காடாக இருக்கிறது. 2019இல், இந்தியா ரூ. 1.28 லட்சம் கோடி மதிப்புள்ள பொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்தது. இந்த ஏற்றுமதிகளில் ஆபரணங்கள், இரும்புத் தாது மற்றும் பருத்தி ஆகியவை அடங்கும். நாம் சீனப் பொருள்களுக்குத் தடை விதித்தோம் என்றால், சீனாவும் கூட இந்தியப் பொருள்கள் மீது தடை விதிக்கலாம். அது இந்தியப் பொருளாதாரத்துக்குப் பலத்த அடியாக இருக்கும்.

மருந்துகள் தயாரிப்பதற்கான வீரிய மருந்து மூலப்பொருள்களில் (ஏபிஐ) மூன்றில் இரண்டு பங்கு, சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. வர்த்தகச் சமநிலையின்மை பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக, 2018இல் தில்லியில், இந்தியா – சீனா கூட்டுப் பொருளாதாரக் குழு கூடி ஆலோசித்தது. இதன் பின்னர், இருதரப்பு வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பது என இரு நாடுகளுமே ஒப்புக் கொண்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இது போன்ற சிக்கல்கள் உள்ள சூழ்நிலையில், சமூக ஊடகங்களில் வலியுறுத்தப்படுவதைப் போல சீனப் பொருள்களைப் புறக்கணிப்பது என்பது எளிதில் நடந்து விடக்கூடியது அல்ல.

முந்தைய காலத்தில் தோல்வி அடைந்த முயற்சிகள்

முந்தைய காலத்தில், பல்வேறு நாடுகள் அந்நிய பொருள்களுக்குத் தடை விதிக்க முயன்று தோற்றுப் போயுள்ளன. 1930இல், ஜப்பானியப் பொருள்களை சீனா புறக்கணித்தது. 2003இல், பிரெஞ்சுப் பொருள்களைப் புறக்கணிக்க அமெரிக்கா முயன்றது. இரண்டு நிகழ்வுகளிலுமே, இந்த முயற்சிகள் தோல்வியைத் தான் சந்தித்தன. ஸ்மார்ட் ஃபோன்கள் அல்லது மடிக்கணினிகள் மட்டும் அல்ல, பல்வேறு மின்னணுப் பொருள்களில் பயன்படுத்தப்படும் ஏராளமான அத்தியாவசிய பாகங்களையும் சீனா தயாரிக்கிறது. குறைந்த கூலி மற்றும் சிறந்த வர்த்தகச் சலுகைகள் ஆகியவையே, பிறரால் போட்டியிட முடியாத அளவுக்குப் பொருட்களுக்கு மலிவான விலையை சீனா நிர்ணயிப்பதற்குப் பின்புலத்தில் உள்ள காரணங்கள் ஆகும்.

அதற்காகவே, உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளும், சீனாவிடம் இருந்து மூலப் பொருள்களையும் உதிரி பாகங்களையும் இறக்குமதி செய்கின்றன. இத்தகைய சூழ்நிலைகளில், சீனா அல்லாத பொருளில் இருந்து சீனப் பொருளைத் தனியாகக் கண்டறிவது சாத்தியமான ஒன்றல்ல. சீனப் பொருள்களை உபயோகிப்பதைப் புறக்கணிப்பதன் மூலம் சீனாவின் லாபத்துக்கு பின்னடைவு ஏற்பட வேண்டும் என்று நாம் விரும்பினால், ஏராளமான முக்கியப் பொருள்களை நாம் கைவிட வேண்டி வரும். இல்லையேல், வேறு நாடுகளில் ஒன்றுகூட்டப்பட்ட அதே பொருள்களை அதிக விலை கொடுத்து நாம் வாங்க வேண்டி இருக்கும். இது, இறுதியில் நமது ஜிடிபி-யில் பாதிப்பை ஏற்படுத்தும். எவ்வளவு விரைவில் இந்தியா தன்னிறைவுப் பொருளாதார நாடாக உருவெடுத்து, போட்டியிடக் கூடிய வகையிலான மலிவான விலையில் பொருள்களைத் தயாரிக்கிறதோ, அவ்வளவு எளிதாக நாம் “உள்நாட்டுக்குக் குரல் கொடுப்போம்” என்ற பாதையில் நடை பயில முடியும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.