ETV Bharat / bharat

மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருட்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் இந்தியா...! - மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்

உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு மருந்து தயாரிப்பில் பலம்வாய்ந்த நாடாக திகழும் இந்தியா, தனது நாட்டு மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை தயாரிக்க போதுமான மூலப் பொருட்கள் வைத்துள்ளதா என்பதை விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு...

CAN INDIA PUT AN END TO API OVERRELIANCE?

author img

By

Published : Apr 21, 2020, 5:34 PM IST

உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த வைரஸை முழுமையாக கட்டுப்படுத்த தனிமைப்படுத்தலை தவிர வேறு எந்தவித தீர்வும் இதுவரை காணப்படவில்லை. வைரஸைக் கட்டுப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவ நிபுணர்களும், ஆராய்ச்சியாளர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கரோனா வைரஸ்
கரோனா வைரஸ்

கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கென்று பிரத்யேக மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை என்றபோதிலும் எச்ஐவி, மலேரியா போன்ற நோய்களுக்கு எதிராக பயன்படுத்தும் தடுப்பு மருந்துகளை, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கும்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக, தற்போது உலகளவில் இந்த நோய்த் தடுப்பு மருந்துகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் அபரிவிதமான வளர்ச்சியைப் பெற்றுவரும் இந்தியா, உலகளவில் மூன்றாவது பெரிய மருத்துவ நிறுவனங்கள் கொண்ட நாடாக விளங்குகிறது.

வளரும் நாடான ஆப்பிரிக்கா முதல் வளர்ந்த நாடான அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்துவருகிறது.

மருத்து
மருந்து

நோய்த் தடுப்பு மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மருந்துகள் தயாரிக்க பயன்படும் மூல பொருட்களுக்கு அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆந்திர, தெலங்கானாவில் உள்ள மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் போதுமான மூலப்பொருட்களின் இருப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், போதுமான மூல பொருட்களின்றி நோய்த் தடுப்பு மருந்துகள் தயாரிப்பது முடியாத காரியம் என்று தொழில்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிற நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்யும் அதேவேளையில், நம் நாட்டிற்குத் தேவைப்படும் மருந்துகளை இருப்பில் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

உள்ளூரில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவில் மருந்து தயாரிப்பிற்கான மூலப்பொருட்களின்றி பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் அமைந்துள்ள மருத்துவ தயாரிப்பு நிறுவனங்கள் எச்ஐவி தடுப்பு மருந்து, அசித்ரோமைசின், குளோரோகுயின் ஆகியவற்றையே முதன்மையாக தயாரித்து வருகின்றன.

கரோனா வைரஸ் பரவலுக்கு முன்பாக ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளுக்கு அதிக தேவையில்லாத நிலையிருந்தது. இந்த மருந்தை மலேரியா, முடக்கு வாதம், லூபஸ் போன்ற நோய் தடுப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்தது. இதனால், அதன் மூலப்பொருட்களை கையிறுப்பு வைத்துக்கொள்வதில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கவனம் செலுத்த தவறிவிட்டன.

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துக்கான தேவை உலகளவில் அதிகரித்துள்ள இந்தச் சூழலில், தங்களிடம் இருப்பில் உள்ள மூலப்பொருட்களை வைத்து மருந்து தயாரிக்கும் பணியில் உள்ளூர் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இருந்தபோதிலும், மூலப்பொருட்களின்றி தொடர்ச்சியாக தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் மருந்து தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களான இப்கா லெபாரட்டரீஸ், சைடெஸ், சிப்லா போன்ற நிறுவனங்கள் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துக்கான மூலப்பொருட்களை சீனாவிடம் இருந்து வாங்க முடிவுசெய்துள்ளது. இந்தியாவிலுள்ள வேறு சில நிறுவனங்கள் மூலப்பொருட்களைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், மூலப்பொருட்கள் இல்லாததால் மருந்து தயாரிக்கும் பணிகள் முடங்கியுள்ளதாக தெலங்கானாவின் மருந்துகள் கட்டுப்பாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவ நிறுவனங்களின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அதனை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் சீனாவிலிருந்து வர காத்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தைத் தவிர்த்து, அசித்ரோமைசின், குளோரோகுயின் பாஸ்பேட், பாராசிட்டமால், மாண்ட்டிலூகாஸ்ட், ஃபவிபிரவிர் உள்ளிட்ட மருந்துகளும் வழங்கப்பட்டுவருதாக அவர் கூறினார்.

இதையும் பார்க்க: மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சரவை குழு: கவலை தெரிவித்த மம்தா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.