ETV Bharat / bharat

கரோனாவுக்கு சீனாவை பொறுப்பேற்க வைக்க முடியுமா - ஒரு அலசல் - அனந்த் கிருஷ்ணன்

கரோனா பாதிப்புக்கு பின் சீனாமீதான உலக நாடுகளின் பார்வை, இந்தியாவில் அதன் தாக்கம் குறித்து நிபுணர்களுடன் ஈடிவி பாரத் மேற்கொண்ட சிறப்பு கலந்துரையடலின் தமிழாக்கம்..

ex
ex
author img

By

Published : Apr 28, 2020, 12:37 PM IST

கோவிட் 19 பாதிப்பு உலகையே உலுக்கிவரும் நிலையில், இந்த பேரிடருக்கு சீனா பொறுப்பேற்குமா. அதன் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மாவுடன் கௌதம் பம்பாவாலே (முன்னாள் வெளியுறவுத்துறை தூதர் ), அனந்த் கிருஷ்ணன் (மூத்த செய்தியாளர் தி இந்து) , கிருஷ்ணானந்த் திரிபாதி (செய்தி ஆசிரியர் ஈடிவி பாரத்) ஆகியோர் நடத்திய உரையாடலின் முக்கிய அம்சங்கள் இதோ...

வைரசின் தொடக்கம்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஹூபே மாகாணத்திலும் வூஹான் நகரிலும் உண்மையில் என்ன நடைபெற்றது என்பதை உலக நாடுகள் தெரிந்துகொள்ள பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றன. ஆனால், தற்போதுவரை சீனா பிடிகொடுப்பதாக இல்லை. உலகநாடுகளின் தொடர் கேள்விகளுக்குப் பின்னர் சீனா தனது உயிரிழப்பு விவரத்தை மாற்றி எண்ணிக்கையை அதிகமாகக் காட்டியுள்ளது. இப்படி இருக்க சீனாவே முன்வந்து தனது விளக்கதை தெரிவிக்காத வரையில் தொடர் கேள்விகள் எழுந்த வண்ணமே இருக்கும்.

சீனாவை பொறுப்பேற்க வைக்க முடியுமா

உலக நாடுகள் அனைத்தும் சீனாவுக்கெதிராக திரளத்தொடங்கியுள்ளது. உலகளவில் பெரும்பாலான மக்கள் கரோனாவின் நேரடித்தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, இந்தத் தாக்கத்திலிருந்து மீண்டுவந்தபின் இவ்விவராகம் தொடர்பாக எழுப்பப்படும் பல்வேறு காத்திராமான கேள்விகளுக்கு சீனா பதில் சொல்லும் காலம் வரும் என கௌதம் பம்பாவாலேத் தெரிவித்துள்ளார்.

சீனாவை நாம் விரும்பலாம் அல்லது வெறுக்காலம் ஆனால் புறக்கணிக்க முடியாது. உலகின் தலைசிறந்த உற்பத்தி மையமாகத் திகழும் சீனாவை இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் எதுவும் புறக்கணிக்க தற்போதைக்கு வாய்ப்பில்லை. சீனாவைச் சார்ந்தே நாம் சில காலத்திற்கு இயங்க வேண்டிய தேவை உள்ளது என கிருஷ்ணானந் திரிபாதி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் விதமாக பல உலக நாடுகள் சீனாவைத் தவிர வேறு உற்பத்தி மையம் கிடைக்குமான என்ற தேடலில் உள்ளது. இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி பல இந்திய நிறுவனங்கள் உற்பத்தி மையமாக மாற வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

புதிய வர்த்தகப் போர்

இந்த விவகாரத்தை சீனா கூர்ந்து கவனித்து அனுகிவருகிறது. அன்மையில் ஆஸ்திரேலியா சீனாவிலிருந்து மதுபானம் மற்றும் மாட்டிறைச்சி உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது. உலகம் புதிதாக எந்த வர்த்தகப் போரையும் சந்திக்கப்போவதில்லை. தற்போது ஆஸ்திரேலியாவும் இந்த போரில் இணைந்துள்ள நிலையில் மேலும் சில நாடுகள் இதை பின்பற்றும் வாய்ப்புகள் உள்ளன.

கற்க வேண்டிய பாடம்

இதுவரை ஏற்பட்டுள்ள பெருந்தொற்றுகள் அனைத்தும் பொதுச்சுகாராத்தை எப்படி கையாள வேண்டும், நாட்டில் உள்ள சுகாதார கட்டமைப்பை எவ்விதம் மேம்படுத்த வேண்டும் என்ற கேள்விகளை முன்வைக்கின்றன. ஏற்கனவே இது போன்ற சுகாதார சிக்கல்களைச் சந்தித்த நாடுகள் தற்போதைய சூழலை திறம்பட கையளும் அனுபவம் பெற்றுள்ளன. இதன் மூலம் மற்ற நாடுகளும் தேவையன படிப்பினைகளை பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

அந்நிய முதலீடு கொள்கை

இந்த சூழலில் சீனாவின் சில நிறுவனங்கள் சோர்ந்து கிடக்கும் இந்திய நிறுவனங்களை அபகரிக்கும் வேலையில் களமிறங்கியுள்ளன. இது குறித்து ஐயங்கள் எழுப்பப்டும் நிலையில், இந்தியா தனது வெளிநாட்டு முதலீடுகள் கொள்கையில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளன. இந்திய இது போன்ற மாற்றங்களை மேற்கொண்டதற்கு சீனா தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளது. ஆனால் இந்தியா தனது முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் உறுதியாக உள்ளது.

இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் தங்களின் அந்நிய முதலீட்டு கொள்கையில் மாற்றத்தை கொண்டுவந்து சீனாவின் தாக்கத்திலிருந்து விடுபட முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றன. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனைத்து நாடுகளுக்கும் தார்மீக உரிமைகள் உள்ளன. இதில் சீனா உலக வர்த்தக மையத்திடமிருந்து எந்த நிவாரணத்தையும் பெற முடியாது.

இதையும் படிங்க: சீனா மீதான வெறுப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - நிதின் கட்கரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.