இந்திய-சீன எல்லையில் நடந்த மோதல் காரணமாக அசாதாரண சூழல் நிலவிவருகிறது. பல இடங்களில் சீனாவுக்கு எதிராக போராட்டங்களும், சீனப் பொருள்களை உடைத்தும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், சியோமி இந்திய நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில், "சீனப் பொருள்கள் புறக்கணிப்பு சமூக ஊடகங்களில் மட்டும் தான் உள்ளது" எனப் பதிவிட்டார். இந்தக் கருத்திற்குக் கண்டனம் தெரிவித்து அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் செயலாளர் பிரவீன் காண்டேல்வால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
அதில், "இவரின் கருத்துக்கள் உணர்ச்சியற்றவை. மேலும் அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்திய வீரர்களுக்கு எதிரான சீனாவின் மிருகத்தனமான செயலால் நாட்டு மக்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர். ஆனால், சியோமி தனது கருத்துக்கள் மூலம் சீன முதலாளிகளை மகிழ்விக்க முயற்சிக்கின்றனர். பல வர்த்தகர்கள், மக்கள் சீனப் பொருள்கள் தடைக்கு தங்களது ஆதரவை தொடங்கியுள்ளதால், பல்வேறு பிரபலங்களும் தற்போது இணைந்துள்ளனர். ஆனால், ஜெயினின் அறிக்கை இந்தியர்களின் உணர்வை மதிக்காமல் வணிக லாபங்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சீனாவின் 500க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு இறக்குமதி செய்யாமல் புறக்கணிக்க அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.