ETV Bharat / bharat

பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு எதிராக தேச துரோக வழக்கு? - பிளிப்கார்ட் நிறுவனம்

டெல்லி: நாகாலாந்து குறித்து சர்ச்சை பதிவு வெளியிட்ட காரணத்தால் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு எதிராக தேச துரோக வழக்கு தொடர வேண்டும் என அகில இந்திய வர்த்தக சபை வலியுறித்தியுள்ளது.

பிளிப்கார்ட்
பிளிப்கார்ட்
author img

By

Published : Oct 11, 2020, 7:20 PM IST

நாகாலாந்தில் பிளிப்கார்ட் நிறுவனம் சேவைகளை மேற்கொள்கிறதா என ஒரு வாடிக்கையாளர் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, இந்தியாவிற்கு வெளியே சேவை புரிவதில்லை என பிளிப்கார்ட் நிறுவனம் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை கிளப்ப, ட்விட்டர்வாசிகள் பிளிப்கார்ட் நிறுவனத்தை விமர்சித்துவருகின்றனர்.

இந்நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு எதிராக தேச துரோக வழக்கு தொடர வேண்டும் என அகில இந்திய வர்த்தக சபை வலியுறித்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய வர்த்தக சபையின் தேசியச் செயலாளர் பிரவின் கந்தேல்வால், "இதனை என்னால் நம்பமுடியவில்லை. அதிர்ச்சி அளிக்கிறது.

பிளிப்கார்ட்
பிளிப்கார்ட்

நாகாலாந்தை இந்தியாவின் ஒரு அங்கம் இல்லை என பிளிப்கார்ட் தெரிவி்த்திருப்பது அம்மாநில மக்களின் மனதை மட்டும் புண்படுத்தாமல் ஒட்டு மொத்த இந்தியர்களின் மனதையும் புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எடுத்துச் செல்வோம். சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்டிருந்தாலும், பிளிப்கார்ட் நிறுவனத்தை மன்னிக்க முடியாது.

அகில இந்திய வர்த்தக சபையின் தேசியச் செயலாளர் பிரவின் கந்தேல்வால்

இந்தியாவில் இருந்து கொண்டு, நாட்டின் ஒரு மாநிலத்தை வெளிநாடு எனச் சொல்வது மன்னிக்க முடியாத குற்றம். சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.