புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் நடந்தது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம் ,கந்தசாமி ,ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ் ,கமலக்கண்ணன், தலைமைச் செயலர் அஸ்வினி குமார் உள்ளிட்ட பல்வேறு உயர் அலுவர்கள் கலந்துகொண்டனர். இதில் முதலாவதாக மறைந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், ஆதிதிராவிட நலத்துறை என்ற பெயரில் இயங்கும் துறையை ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறையாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் இலவச அரிசித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது, மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட முடிவுகளும் எடுக்கப்பட்டது. அதேபோல் லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.