இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பிரதமர், "மத்திய அமைச்சரவையின் இந்த முடிவுகள் கிராமப்புற இந்தியாவில், குறிப்பாக உழைக்கும் விவசாயிகளுக்கு மிகவும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த சீர்த்திருத்தங்கள் வேளாண்மைத் துறையின் மாற்றத்திற்கு உதவும். வேளாண் உற்பத்தி வர்த்தக ஊக்குவிப்பு வரைவு 2020 'ஒரு நாடு; ஒரு சந்தை' உருவாக்க வழி வகுக்கும்.
இந்த வரைவு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதோடு, நடைமுறையில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும்வகையில் அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட 2020 விலை நிர்ணயம் தொடர்பான ஒப்பந்தம் மொத்த விற்பனையாளர்கள், பெரிய சில்லறை விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருடன் விவசாயிகள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அதிக சுதந்திரம் பெறுவதை உறுதிசெய்யும்" என்றார்.