ETV Bharat / bharat

கரோனா அச்சம்: மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு முடிவு - மக்களிடையே விழிப்புணர்வு

டெல்லி: முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கை கழுவுவது உள்ளிட்டவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Cabinet decides to launch Covid awareness campaign

author img

By

Published : Oct 7, 2020, 7:59 PM IST

Updated : Oct 7, 2020, 8:04 PM IST

கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், முகக்கவசம் அணியாமலும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் மக்கள் வெளியே செல்கிறார்கள் எனக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெருந்தொற்று வழிகாட்டுதல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கரோனா தடுப்பூசி இல்லாதபட்சத்தில் முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை ஒழுங்காக கழுவுவதை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இது குறித்த விழிப்புணர்வுப் பரப்புரையை தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, விமான நிலையம், ரயில்வே நிலையம், பேருந்து நிலையம், காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொள்ளப்படும்" என்றார்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 72 ஆயிரத்து 49 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 986 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி மற்றுமொரு சாதனை!

Last Updated : Oct 7, 2020, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.