ETV Bharat / bharat

அலைக்கற்றை ஏலத்தில் விட அமைச்சரவை ஒப்புதல்!

author img

By

Published : Dec 16, 2020, 6:31 PM IST

டெல்லி: அடுத்தக்கட்ட அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அமைச்சரவை
அமைச்சரவை

புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடிவரும் நிலையில், விவசாயம், தொலைத்தொடர்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகள் சார்ந்த முடிவுகளை மத்திய அமைச்சரவை இன்று எடுத்துள்ளது.

கரும்புக்கு மானியம்

மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 60 லட்சம் டன் கரும்புக்கு மானியம் வழங்கப்படும் என அறிவித்தார். இதன்மூலம், ஐந்து கோடி விவசாயிகள், ஐந்து லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், "விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் நேரடியாக சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக, கரும்பு உபரியாக உற்பத்தி செய்யப்படுவதால் அதன் விலை வெகுவாக குறைந்துள்ளது. வரும் நாள்களில் மானியம் மூன்று கட்டங்களாக வழங்கப்படும்" என்றார். 2020-21ஆம் ஆண்டில், 60 லட்சம் டன் கரும்பு ஏற்றுமதிக்கு 3,600 கோடி ரூபாய் மானியம் வழங்க உணவு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

அடுத்தகட்ட அலைக்கற்றை ஏலம்

அடுத்தகட்ட அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பதுறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். கடைசியாக, அலைக்கற்றை ஏலம் 2016ஆம் ஆண்டு விடப்பட்டது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "700 MHz, 800 MHz, 900 MHz, 1,800 MHz, 2100 MHz, 2,300 MHz மற்றும் 2,500 MHz பிரிகுவன்சி பான்ட் கொண்ட அலைக்கற்றை 20 ஆண்டுல காலத்திற்கு ஏலத்தில் விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மொத்தமாக, 2,251.25 MHz பிரிகுவன்சி பான்ட் 3,92,332.70 கோடி ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.