கரோனா லாக்டவுன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கத்தை சீரமைக்க சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் முத்தரா கடன் பயனாளர்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி நிதியை மத்திய அமைச்சரவை இன்று ஒதுக்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தற்சார்பு இந்தியா என்ற திட்டத்தின் பெயரில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பீட்டில் சிறப்பு நிதிச் சலுகையை மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின் தொடர் நடவடிக்கையாக இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேலும் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியம் வழங்கும் திட்டம், உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை முறைப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி சிறப்பு நிதி, வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு சிறப்பு நிதி ஆகிய முடிவுகளும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. கடந்த திங்களன்று நான்காவது கட்ட லாக்டவுனுக்கு இந்தியா நுழைந்த நிலையில், இதுவரை ஒரு லட்சத்து ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இந்து மூதாட்டியின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்த இஸ்லாமியர்கள்!