ஒ.பி. ஜிண்டால் உலகப் பல்கலைக்கழகத்தில் கல்வியாளர் டாக்டர் என்.ஆர். மாதவ மேனன் நினைவு சொற்பொழிவில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர், 'சட்டம், இந்தியாவின் யோசனை' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், “மேனன் சிறந்த கல்வியாளர். நவீன சட்டக் கல்வியின் பின்னணியில் இருந்தவர். பெங்களுருவிலிலுள்ள தேசிய சட்டப் பள்ளி, இந்திய பல்கலைக்கழகத்தின் நிறுவனர்- இயக்குநராக 12 ஆண்டுகள் இருந்தார்.
அதன்பின்னர் அவர் மேற்கு வங்க தேசிய நீதித் துறை அறிவியல் பல்கலைக்கழகத்தை நிறுவினார். இதைத்தொடர்ந்து 2006ஆம் ஆண்டு வரை போபாலிலுள்ள நீதித் துறை அகாதமியின் நிறுவனர் இயக்குநராகத் தலைமையேற்று நடத்தினார்.
இந்தியர்களைப் பிணைப்பது நிலம்தான். மதத்தின் அடிப்படையில் குடியுரிமை குறித்த எந்தவொரு கருத்தையும் அரசியலமைப்பாளர்கள் நிராகரித்தனர். ஆகவே குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முடிவுசெய்ய வேண்டும். ஏனெனில் இது நாட்டின் ஆன்மா, யோசனைக்கு எதிரானது” என்றார்.
இதுமட்டுமின்றி சசிதரூர், தன்பால் ஈர்ப்பை நியாயப்படுத்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுப் பாராட்டினார். சமீபத்திய ஊடகங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில், அவை ஒரு குழப்பமான சோதனை போக்கை உருவாக்கியுள்ளன என்றார்.
இந்த விழாவில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கௌல், “மாறிவரும் காலத்திற்கேற்ப மாற்றும் அளவுக்கு அரசியலமைப்பு மீள்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்” என்றார். பாலியல் தொழில், பிரிவு 377 மற்றும் ஆயுதப்படைகளில் பெண்களின் நிரந்தர ஆணையம் தொடர்பான சமீபத்திய தீர்ப்புகளை நீதிபதி கவுல் குறிப்பிட்டார்.
இந்தத் தீர்ப்புகள் இந்தியாவின் பங்கை உயர்த்துவதில் முக்கியப் பங்கு வகித்தன என்றும் அவர் கூறினார். பி.ஆர். அம்பேத்கரை மேற்கோள்காட்டிய நீதிபதி கௌல், “அரசியலமைப்பு அறநெறி என்பது இயற்கையான உணர்வு அல்ல; அதை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: மு.க. ஸ்டாலினின் 10 மேடைப் பேச்சு, ரஜினியின் 10 நிமிட பேட்டிக்கு ஈடாகுமா? கராத்தே தியாகராஜன்