ETV Bharat / bharat

'பேச்சுவார்த்தையைவிட துப்பாக்கி முனையில் அதை நிகழ்த்துக!' - ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல்

இந்திய எல்லையோரத்தின் பதற்றமான சூழ்நிலையை பேச்சுவார்த்தை மூலம் கட்டுக்குள் கொண்டுவருவதை விட துப்பாக்கி முனையில்தான் அது நிகழ்த்தப்பட வேண்டும் என்று ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா கருத்து தெரிவித்துள்ளார்.

டி.எஸ். ஹூடா
author img

By

Published : Oct 23, 2019, 7:55 PM IST

கடந்த சில நாள்களாக ஜம்மு-காஷ்மீரின் எல்லையோரத்தில் பாகிஸ்தான் ஊடுருவல்களால் போர்நிறுத்த மீறல் தாக்குதல் நடைபெற்றுவருவதால் அப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

கடந்த 20ஆம் தேதி எல்லையோரத்தில் இரு நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் உள்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா எழுதிய கட்டுரையில் தெரிவித்ததாவது:

இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரப் பகுதியில் கடந்த 20ஆம் தேதி மிகவும் மோசமான தினங்களின் ஒன்றாகும். அன்று இந்தியா, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில், இந்தியா பீரங்கிகளைக் கொண்டு பாகிஸ்தான் பயங்கரவாத ஏவுதளங்களைத் தாக்கியது.

தாக்குதலின் முடிவில் இந்தியாவைச் சேர்ந்த பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். மேலும் பாகிஸ்தான் வீரர்கள் ஆறிலிருந்து பத்து பேர் வரை இறந்திருக்கலாம் என்றும் மேலும் இருதரப்பிற்கும் பயங்கர பொருள்சேதம் ஏற்பட்டதாகவும் பாதுகாப்புப் படைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்-இந்தியாவிற்கும் இடையே போர் நிறுத்த மீறல்களால் ஏற்படும் தாக்குதல், அதைத் தொடர்ந்து சமூக வலைதளமான ட்விட்டரில் அந்தப் பயங்கர தாக்குதல் குறித்த போலியான காணொலிக் காட்சிகள் பகிர்வு, இருநாட்டு மக்கள் இடையேயான வார்த்தை மோதல் ஆகியவை மிகவும் சர்வசாதாரணமாகப் பார்க்கப்பட்டது.

இருநாட்டிற்கும் மத்தியில் 2003ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உடன்படிக்கை எட்டியது. அதிலிருந்து அடுத்து ஒரு தசாப்தம் வரை எல்லையோரத்தில் பொதுமக்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்ந்துவந்தனர்.

ஆனால் 2018ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள அர்னிய பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் சுமார் 76 ஆயிரத்திற்கு அதிகமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலின் எதிரொலி எதிர் நாட்டிலும் காணப்பட்டது.

என் கண்ணோட்டத்தில், 2013ஆம் ஆண்டிலிருந்து ஜம்மு-காஷ்மீருக்கு இந்திய அரசு கூடுதலான பாதுகாப்பு அளிக்க தொடங்கியதும் நவாஸ் ஷெரீப் பிரதமரானதும் (அவர் இந்திய-பாகிஸ்தான் மோதலில் இந்தியாவிடம் கனிவோடு நடந்துகொள்பவர்) அது பாகிஸ்தான் பாதுகாப்புப் படைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. அதன் வெளிப்பாடாக காஷ்மீரில் உள்ள ஹிராநகர், சம்பா, ஜாங்லோட் பகுதிகளில் அவர்களின் அத்துமீறல்கள் உச்சத்தை எட்டியது.

இப்படி இருநாட்டு எல்லையோரத்தில் மாறி மாறி சரமாரியான தாக்குதல்கள் தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. இந்தத் தொடர் வன்முறை புயல் ஓய வேண்டும் என்று அது குறித்து எந்த அறிவுரை கூறினாலும் அதை சொல்வதைக் காட்டிலும் செயல்படுத்துவது மிக கடினமாகும்.

தற்போது இந்திய-பாகிஸ்தானின் உறவு மிகவும் மோசமாக உள்ளது. அதற்கு தெம்பூட்டி புதிய வடிவிற்கு கொண்டுவர வேண்டும்.

தற்போது எல்லையோரத்தில் உள்ள பதற்றமான சூழ்நிலையை இருதரப்பினர் பேச்சுவார்த்தை மூலம் கட்டுப்படுத்துவதைவிட, துப்பாக்கி முனை கொண்டுதான் அது நிகழ்த்தப்பட வேண்டும். அப்படி நிகழ்ந்தால் அது உயிரிழந்த பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் மரியாதையளிக்கும் விதமாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க: பயங்கரவாதிகள் மூன்று பேரை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்!

Intro:Body:

https://www.polimernews.com/dnews/86002

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.